கீழ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கீழ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2024-01-22 10:56 GMT

மயிலாடுதுறை அருகே கீழ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.  

மயிலாடுதுறை அருகே ஆறுபாதி ஊராட்சியில் விளநகர் பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலை சேர்ந்த கீழ மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு 14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் சிறப்பு ஹோமங்கள் கடந்த இருபதாம் தேதி தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் இன்று நிறைவுற்று மஹா பூர்ணாகுதி நடைபெற்று. பின்னர் மேல வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் ஊர்வலமாக ஆலயத்தை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு வந்தடைந்தது. பின்பு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News