உச்சிமாகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பாளையங்கோட்டை வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

Update: 2024-06-16 08:24 GMT

 பாளையங்கோட்டை வடக்கு உச்சிமாகாளி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இன்று (ஜூன்16) காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்பாளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஆசியுரை வழங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News