பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா !

பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-06-13 05:51 GMT
 கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த இவ்வாலயத்தை ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் புணரமைத்து புதிதாக மண்டபம் மற்றும் நவகிரக சன்னிதானம் அமைத்து கும்பாபிஷேகம் செய்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

பணிகள் முடிவுற்ற நிலையில் ஆலய கும்பாபிஷேகம் நடத்திட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த திங்கட்கிழமை ஆலய வளாகத்தில் 5 யாக சாலையுடன் பிரதான கலசம் 5, துணை கலசம் 508 அமைத்து கணபதி பூஜையுடன் கோ பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு வேள்விகள் துவங்கி நடைப்பெற்று வந்தது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வேள்விகள் மற்றும் 4 கால பூஜைகள் முடிவுற்று நேற்று காலை 6.15மணியாவில் கலச புறப்பாடு துவங்கியது.

சரியாக 6.45 மணியளவில் கலசங்களிலிருந்த நீரினை கொண்டு கோபுர விமானத்திற்கும் மூலவர் அம்பாளுக்கும் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கும் சிவாச்சாரியார்களால் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நட்த்தப்பட்டது. பக்தர்கள் மீது கலசநீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கொத்தி மங்கலம் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News