பச்சையம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது.
Update: 2024-04-20 01:27 GMT
காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சை அரசந்தாங்கல் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. இதில், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மஹாலட்சுமி பூஜை, நவக்கிரஹ பூஜை, கோபூஜை, தனபூஜை, கணபதி மஹாலட்சுமி நவக்கிரஹ ஹோம் உள்ளிட்டவை நடக்கிறது. நாளை , காலை 8:00 மணிக்கு கலச புறப்பாடும், தொடர்ந்து கோபுரத்திற்கும், மூலவர் பச்சையம்மன் மற்றும் விநாயகர், முருகர், சிவன், நாகங்கள், நவக்கிரஹம், ஆஞ்சநேயர், ரேணுகாம்பாள், விஷ்ணு துர்கை அம்மன், வாழ்முனி, செம்முனை உள்ளிட்ட பரிவாரங்களுக்கு 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.