மூன்று கோயில் கும்பாபிஷேகம்
கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன்,நரசிங்கபெருமாள் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் சித்தி விநாயகர், அங்காளம்மன்,மாகாளியம்மன்,பெருமாள், மாரியம்மன், முத்துமாரியம்மன்,முருகன் கோவில் என பல்வேறு கோவில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது.இதில் ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன்,நரசிங்கபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக நேற்று தெற்கு பிள்ளையார் கோவிலில் பூஜைகள் செய்யபட்ட பின்னர் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.இன்று காலை மாரியம்மன் கோவிலில் யாக குண்டம் ஏற்றி கங்கணம் கட்டும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவில் அருகே உள்ள இல்லத்தில் இருந்து லக்ஷ்மி வராக பெருமாள்,பூரத்தாழ்வார் மற்றும் சக்கரதாழ்வார் உற்சவ மூர்த்திகள் பட்டின பிரவேசமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வாஸ்து பூஜை யாக சாலை பிரவேசம் நடைபெற்றது.