பஞ்சாயுதேஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா

சித்தாமூர் அடுத்த முகுந்தகிரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாயுதேஸ்வரி உடனுறை பஞ்சாயுதேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-16 13:35 GMT
பஞ்சாயுதேஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேக விழா
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் அடுத்த முகுந்தகிரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாயுதேஸ்வரர் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கடந்த 14 ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை,விக்னேஸ்வர பூஜை,நவக்கிரக பூஜை,கோ பூஜை நடந்ததை அடுத்து,இன்று காலை பஞ்சாயுதேஸ்வரர் கோவில் கோபுர விமானத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பஞ்சாயுதேஸ்வரருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பஞ்சாயுதேஸ்வரரை வழிப்பட்டு சென்றனர்.
Tags:    

Similar News