சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

ஏ எஸ் டி சி நகர் பகுதியில் சித்தி விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2024-06-17 03:25 GMT

கும்பாபிஷேகம்

தர்மபுரி நகரப்பகுதி விஜய் வித்யாலயா பள்ளி அருகே ஏ எஸ் டி சி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் மங்கள இசை விநாயகர் பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஓமம் நவகிரக ஹோமம் நடைபெற்று அதை தொடர்ந்து காப்பு கட்டுதல் மகா தேவாரணையில் நடைபெற்றது. 15ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் விநாயகர் பூஜை வாஸ்து சாந்தி பவேசபலி அங்குரார்பணம் முதல் கால யாக பூஜை, த்வார பூஜை, வேதீகார்ச்சனை ஹாமம், அஸ்டபந்தன மருந்து சாத்தல், பூர்ணாவதி ஷோடச உபசாரம், மகா தீபாராதனை வழங்கப்பட்டது.

 முக்கிய நாளான நேற்று காலை 6 மணி அளவில் கணபதி பூஜை இரண்டாம் கால யாக பூஜை நாடி சந்தானம் யஜமாநர் சங்கல்பம் தத்வார்ச்சனை ஸ்பர்சாவதி அவப்ருதயாகம் அதைத்தொடர்ந்து 10 மணி அளவில் மஹா பூர்ணாவதி யாத்ராதானம் முதலில் விமானத்திற்கு கும்பாபிஷேகம் காலை 10 மணி அளவில் ஸ்ரீ சித்தி விநாயகர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மற்றும் பரிவார மகாலட்சுமி தட்சிணாமூர்த்தி மகாவிஷ்ணு சரஸ்வதி துர்க்கை அம்மன் கும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.

Tags:    

Similar News