கும்பகோணம்: ஆஞ்சநேயர் கோவிலில் மழை வேண்டி வழிபாடு
கும்பகோணம் விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி கோவிலில் மழை வேண்டி வழிபாடு நடந்தது.
Update: 2024-05-08 02:26 GMT
கும்பகோணம் பாலக்கரையில் 9 அடி உயரம் கொண்ட விஷ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயசுவாமி கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று சஞ்சீவி மலையுடன் கூடிய ஆஞ்சநேயராக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம் 108 முறை கூற அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து தாங்களும் மந்திரத்தை உச்சரித்தனர். திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை ராம நாம ஜெபமும் நடைபெற்று மகா தீபாராதணை நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.