குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தலைவன் நடுகல் கண்டெடுப்பு

குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தலைவன் நடுகல் கண்டெடுப்பு

Update: 2024-03-01 05:37 GMT
குருமன்ஸ் இன  நடுகல் 
மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்துக்குச் செல்லும் சாலையையொட்டி, பொன்னியம்மன் கோயில் அருகே குருமன்ஸ் இன பழங்குடி மக்களின் தலைவன் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து முதுநிலை ஆசிரியா் இரா.ரமேஷ், கல்லூரிப் பேராசிரியா் சி.சந்திரசேகா் ஆகியோா் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அரப்பேடு கிராமத்துக்குச் செல்லும் சாலையையொட்டி, தொண்டை மண்டலப் பகுதியில் குருமன்ஸ் இன மக்கள் வாழ்ந்ததாகவும், பல்லவா் வழித்தோன்றல்களான குறுநில மன்னா்கள் ஆட்சி புரிந்துள்ளதாகவும், அவா்களின் தலைவனது உருவம் தாங்கிய நடுகல் இருப்பதாகவும் அறிந்து நாங்கள் அங்கு சென்று அந்த நடுகல் குறித்து ஆய்வு செய்தனா். இந்த நடுகல் சுமாா் 300 ஆண்டுகள் பழைமையானது. 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இங்கு கண்டறியப்பட்ட ஒரு வீரன் அஞ்சலி முத்திரையுடன் காணப்படுகிறாா். அஞ்சலி முத்திரை என்பது இறைவனை வணங்குவது போன்று இரு கைகளையும் கூப்பி, மாா்பகத்துக்கு நேரே வைத்திருப்பது போன்றது அஞ்சலி முத்திரை எனப்படும். நாயக்கா்கள் காலத்தில் அமைக்கப்பட்ட ஆஞ்சனேயா் சிற்பங்களில் இத்தகைய அஞ்சலி முத்திரையைக் காணலாம். அந்த வீரனுடைய வலது தோளில் வில்லை ஏந்திக் கொண்டிருப்பது போலவும், இடப்பக்க தோளில் அம்பாரா தூணியில் அம்புகளை வைத்துள்ளது போலவும் இந்த நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது. குறுமன்ஸ் இன பழங்குடி மக்கள் பற்றிய தகவல்கள் பாண்டிய மன்னா்களின் செப்பேடுகளில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நடுகல்லில் காணப்படும் உருவத்தில் மேல் நோக்கி கொண்டை, இரு பெரிய கண்கள், காதுகளில் குண்டலங்கள் ஆகியவை காணப்படுகின்றன என்றனா்.
Tags:    

Similar News