குறிஞ்சிப்பாடி:மோட்டாரை திருடிய வாலிபரை தேடல்
குறிஞ்சிப்பாடி அருகே மோட்டாரை திருடிய வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.;
Update: 2024-03-04 06:34 GMT
வழக்கு பதிவு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் இவரது வீட்டில் சில தினங்களுக்கு முன்பு மின் மோட்டார் திருடு போனது. இது குறித்து பாலசுப்ரமணியன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜி மகன் நடராஜன் என்பவர் மின் மோட்டாரை திருடிச் சென்றதாக தெரிவித்திருந்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து நடராஜனை தேடி வருகின்றனர்.