உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்தி

உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்தியினை மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டார்.

Update: 2024-04-30 07:29 GMT

உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்தியினை மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டார்.


உழைப்பாளர்களின் உன்னதத்தை உலகிற்குப் பறைசாற்றுவோம்.  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்துச்  செய்தி. "தெள்நீர் அடுபுற்கை ஆயினும் தாள் தந்தது உண்ணலின் ஊங்கு இனியது இல்"(திருக்குறள் 1065.) என்று உழைப்பின் மேன்மையைப் பறைசாற்றுகிறார் வள்ளுவர்.  உழைப்பின் சிறப்பை உலகெலாம் கொண்டாடிடும் உன்னதமான நாள் மே தினம்.  தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்யப்பட்ட நாள். உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைக்கச் செய்த நாள் மே தினம்! இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. தொழிலாளியின் வியர்வை உலரும் முன் அவருக்கான கூலியைக் கொடுத்து விடுங்கள் என்ற நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதலுக்கு ஒப்ப உழைப்பவர்களுக்கு  உரிமைகளை வழக்கிடுவோம். உலக அளவில் புரட்சிகள் என்பவை தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் கிடைக்கப் பெற்றவையே. ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதக் குலம் முழுவதும் தொழிலாளர்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணையும் உன்னத நாளாக இந்த தினம் திகழ்கிறது.  அனைத்து தொழிலாளிகளும் வறுமையை ஒழித்து எல்லோருக்கும் நல்  வாழ்வு கிடைக்க  வல்ல இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.  சுரண்டலற்ற, சாதிமத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய அனைவரும் உறுதி ஏற்போம். உழைப்பாளர்கள் தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய மே தின நல்வாழ்த்துக்கள்.  அன்புடன்.  எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி.
Tags:    

Similar News