வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலித் தொழிலாளி தற்கொலை
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தாத்தையங்கார்பேட்டை ஏரியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-04-29 02:32 GMT
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊரக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் 50 வயதான ஜோதி. இவர் மரம் வெட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஜோதி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தாத்தையங்கார்பேட்டையில் உள்ள ஒரு ஏரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தாத்தையங்கார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து தாத்தையங்கார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.