கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-06 16:17 GMT
தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி
கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிழக்கு தெருவை சேர்ந்த பச்சமுத்து மகன் சீனுவாசன்,47, விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த 6 மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், கடந்த 2-ம் தேதி மதியம் 1 மணிக்கு வயிற்று வலி அதிகமாகவே, தாங்க முடியாமல் விவசாய நிலத்தில் வாங்கி வைத்திருந்த பருத்தி மருந்தினை எடுத்து குடித்துவிட்டார். அவரை மீட்டு தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனுவாசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.