மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
அன்னிமங்கலத்தில் மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
Update: 2024-01-19 06:42 GMT
அரியலூர் மாவட்டம் இலந்தைக்கூடம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். கூலி தொழிலாளியான இவர் இருசக்கர வாகனத்தில் தனது மகனுடன் தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அன்னிமங்கலம் கிராமம் அருகே சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாரதவிதமாக இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதியதில் அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அருண்குமாரின் மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.