சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளி மர்ம சாவு

சேலம் தாதகாப்பட்டியில் தொழிலாளி மர்மான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-14 10:49 GMT

கோப்பு படம் 

சேலம் தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35), பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி சாஹிதா (31). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் சாஹிதா கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது, வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த ஆட்டோவில் வெங்கடேசன் படுத்திருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் சிறிது நேரம் கழித்து, கணவர் வீட்டுக்கு வந்து விடுவார் என நினைத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்குள் வரவில்லை. இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த சாஹிதா நேற்று அதிகாலை அங்கு சென்று பார்த்தார்.

அப்போது, வெங்கடேசன் ஆட்டோவுக்குள் மயங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News