நாகர்கோவிலில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த தொழிலாளி

கன்னியாகுமரி மாவட்டம்,நாகர்கோவில் பகுதியில் அழுகிய நிலையில் தொழிலாளி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-17 06:51 GMT
அழுகிய நிலையில் தொழிலாளி சடலம்

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (50). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தை பிரிந்து தற்போது நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் வலிப்பு நோய் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனியாக வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வடசேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது, வேல்முருகன் அழகிய நிலையில் சடலமாக காணப்பட்டார். இறந்து இரண்டு நாட்கள் வரை ஆகியிருக்கும் என கூறப்படுகிறது. சடலத்தை மீட்ட போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News