வீடு இடிந்து விழுந்து கூலி தொழிலாளி காயம்
மன்னார்குடி அருகே தொடர் மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Update: 2024-05-17 02:09 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிப்பவர் சந்திரசேகர் இவர் கூலி தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை குடும்பத்தோடு தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது திடீரென மேற்கூரையின் சுவர் காரை பெயர்ந்து விழுந்ததில் குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இதில் சந்திரசேகர் மட்டும் காயமடைந்துள்ளார் சந்திரசேகரை ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து மன்னார்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.