கார் மோதி கூலித் தொழிலாளி பலி
கார் மோதி கூலித் தொழிலாளி பலி. போலீசார் விசாரணை.
Update: 2024-04-30 06:09 GMT
சின்னசேலம் அருகே புறவழிச்சாலையில் கார் மோதி பைக்கில் சென்ற கூலித்தொழிலாளி இறந்தார். சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் விஜய், 24; கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி மகன் ஆனந்த், 29; இருவரும் பஜாஜ் பைக்கில் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு நேற்று காலை சென்றனர். பைக்கை விஜய் ஓட்டினார். கனியாமூர் புறவழிச்சாலையில் அருகே சென்ற போது, அதே திசையில் வந்த கியா கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில், விஜய், ஆனந்த் இருவரும் படுகாயமடைந்தனர். உடன், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விஜய் இறந்தார். விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.