அடிப்படை வசதிகள் இன்மை - தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
பாபநாசம் அருகே இலவச வீட்டுமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட கிராம மக்களை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரி காமராஜர் நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகிறனர். இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி நீண்ட நாட்களாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கி காத்துள்ளனர் இதுவரை இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இதனை கண்டித்து இப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் வாக்களிப்போம் என்றும் கூறினார்கள் மேலும் சாலையில் கருப்பு கொடி கட்டியும் சுவரொட்டி ஒட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர இந்நிலையில் தகவல் அறிந்து பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் துணை வட்டாட்சியர் பிரபு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேர்தலை புறக்கணித்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளித்ததன் பேரில் அனைவரும் வாக்களிக்க சென்றனர்