அரசு மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை ஏழை எளிய மக்கள் சிரமம் !
மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-15 07:40 GMT
மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை பெரியார் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் இல்லாத கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்பழகன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பழனிசாமி, தஞ்சாவூர் மண்டல பொறுப்பாளர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டமாக உருவாக்கப்பட்ட பின்பு தாலுக்கா மருத்துவமனையாக இருந்த மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், காவலர் பற்றி குறையால் இரண்டு கேட்டில் ஒரு கேட்டு நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது, செவிலியர்கள் இல்லாததால் உள்நோயாளிகள், புற நோயாளிகள் கடுமையாக பாதிப்பு அடைந்து வருவதாகவும், இந்த மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளதாகவும், 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவும், மருத்துவர்களும், குழந்தை மருத்துவர்கள் இல்லாத நிலையில், நோயாளிகள் குடிப்பதற்கு தண்ணீர் பற்றாக்குறை மேல் சிகிச்சைக்காக பொதுமக்கள் தஞ்சை அல்லது திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு செல்ல உள்ளதால் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.