சோதனை சாவடிகளில் போலீசார் பற்றாக்குறை

காஞ்சிபுரத்தில் போலீசார் பற்றாக்குறை காரணமாக வழக்கமான ரோந்துப்பணிகள் மற்றும் சோதனை சாவடிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

Update: 2024-04-04 03:29 GMT

காஞ்சிபுரத்தில் போலீசார் பற்றாக்குறை காரணமாக வழக்கமான ரோந்துப்பணிகள் மற்றும் சோதனை சாவடிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது.  

தமிழகம் முழுதும், ஏப்.,19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிக்கு, சிறப்பு சோதனைச்சாவடி மற்றும் பறக்கும் படை உள்ளிட்ட பலவித பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் ஏற்கனவே போடப்பட்ட சோதனைச்சாவடி கண்காணிப்பு பணிகளில், காவலர்கள் கவனம் செலுத்த முடியவில்லை.

குறிப்பாக, பரந்துார் விமான நிலையத்திற்கு நில எடுப்பு போராட்டக்காரர்களை சமாளிக்க அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச்சாவடிகளில், காவலர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன. ஒவ்வொரு ஷிப்டிற்கும் நான்கு காவலர்கள் இருந்த இடத்தில், தற்போது, அதே ஷிப்டிற்கு இரு காவலர்கள் கூட கண்காணிக்கும் பணியில் இல்லை என, பேசப்படுகிறது. லோக்சபா தேர்தல் முடியும் வரையில், குறைந்த காவலர்களே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என, காவல் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது."

Tags:    

Similar News