மஞ்சக்குடி கமலாலயம் டிரஸ்ட் விடுதியில் மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு

மஞ்சக்குடி கமலாலயம் டிரஸ்ட் விடுதியில் மாணவிகள் சேர்க்கை அறிவிப்பு வெளியானது.

Update: 2024-06-11 14:55 GMT

கமலாலயம்

 கும்பகோணம் அருகே பெண் குழந்தைகளுக்காக விடுதி நடத்தும் கமலாலயம் டிரஸ்ட் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியின் பிறந்த இடமான மஞ்சக்குடியில் கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

கமலாலயம் டிரஸ்ட் விடுதி தாய் தந்தை அல்லது இருவருமே இல்லாமல் வறுமையில் வாழும் பெண் குழந்தைகளுக்காக நடத்தப்படும் இந்த விடுதியில் திருவாரூர் மற்றும் கும்பகோணம் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண் குழந்தைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தங்கும் அறை உடைகள் கல்வி பாட்டு யோகா போன்ற பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.

கமலாலயத்தில் 2024 25 கல்வி ஆண்டிற்கான சேர்க்கை ஜூன் மாதம் முழுவதும்  நடைபெற உள்ளது . இதில் 15 பெண் குழந்தைகளுக்கான இடம் நிரப்பப்பட உள்ளது இந்த விடுதியில் குழந்தைகளை சேர்க்க விரும்புபவர்கள் குழந்தையின் ஆதார் அட்டை பிறப்புச் சான்றிதழ் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மருத்துவ சான்றிதழ் எடுத்துச் சென்று பதிவு செய்யலாம் பதிவு செய்யப்பட்ட குழந்தையின் விவரங்களை உண்மை தன்மையை டிரஸ்ட்டு மூலமாக வீட்டிற்கு சென்ற பார்த்த பின்பு அட்மிஷன் கொடுக்கப்படுகிறது.

Tags:    

Similar News