காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த ஆணையர்
லால்குடி நகராட்சியில் உள்ள ஓமக்குளம் நகராட்சி துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளை நகராட்சி ஆணையர் குமார் ஆய்வு செய்தார்.;
Update: 2024-03-06 11:11 GMT
ஆணையர் ஆய்வு
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி பகுதிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள பல்வேறு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமக்குளம் பகுதியில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவுகள் வழங்கப்பட்டதை நகராட்சி ஆணையர் வை.குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் குழந்தைகளிடம் அவர் கலந்துரையாடினார்.