ஆட்சிமொழி சட்டவாரம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு
தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது;
Update: 2023-12-16 07:44 GMT
ஆட்சி மொழி சட்டவார கொண்டாட்டம்
தமிழ் ஆட்சிமொழி சட்டம் கடந்த 1956 இல் இயற்றபட்டது. இதனை நினைவு கூறும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கடைபிடிக்கபட உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி ஆய்வு கூட்டம் மற்றும் குறிப்பாணைகள் எழுவதற்கான பயிற்சி வகுப்புகள், ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம் மற்றும் தமிழில் பெயர் பலகை வைப்பது குறித்து வணிக நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.