மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் - மா.செ அறிக்கை
பெரம்ப்பலூரில் திமுக மாணவரணி சார்பில் நடக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் கட்சியினர் கலந்து கொள்ளவேண்டும் என திமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள பெரம்பலூர் மாவட்ட திமுக கட்சி அலுவலத்தில் இருந்து, திமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், தேரடி திடலில், இன்று மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தங்க.கமல் தலைமையில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரினோபாஸ்டின் வரவேற்புரையில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் இராகவி ரவிக்குமார், தமிழ்வேந்தன், இளையராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் மொழிமாறன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மொழிப்போர் தியாகி மூங்கில்பாடி ரெங்கராஜிக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கிருஷ்ணா. நன்றியுரையாற்றுகிறார். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் , ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என திமுக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.