மறைந்த மு.வை.முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சி - இராஜேஸ்குமார் எம்.பி நலஉதவி வழங்கினார்

மறைந்த மு.வை.முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சி - இராஜேஸ்குமார் எம்.பி அன்னாரது புகைப்படத்தை திறந்து வைத்து நலஉதவி வழங்கினார்

Update: 2024-03-02 12:40 GMT

மறைந்த மு.வை.முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சி - இராஜேஸ்குமார் எம்.பி அன்னாரது புகைப்படத்தை திறந்து வைத்து நலஉதவி வழங்கினார்

நாமக்கல் நகராட்சி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ராஜ் தொலைக்காட்சி நாமக்கல் மாவட்ட செய்தியாளர் மறைந்த மு.வை.முத்தையா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். இதில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அன்னாரது புகைப்படத்தை திறந்து வைத்து, மலர்தூவி மாரியதை செலுத்தினார்.

தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தனது சொந்த நிதியிலிருந்து உதவி தொகையான ரூ.50 ஆயிரத்தை அன்னாரது குடும்பித்தினருக்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மேலும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி திட்டத்தின் கீழ், நிதியுதவி பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அன்னாரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மறைந்த மு.வை.முத்தையா புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த மு.வை.முத்தையா 12.05.1959 அன்று எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முட்டாஞ்செட்டியில் பிறந்தார். சிறுவயதிலேயே பெற்றோருடன் கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு சென்று கல்வி பயின்றார். 5 ஆண்டுகள் வால்பாறை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் பத்திரிகையாளராக பணியாற்றினார். 1997 ஆம் ஆண்டு மீண்டும் தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டத்திற்கு திரும்பிய பிறகு, டாக்டர் நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் செய்தியாளராக பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ராஜ் தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக சிறப்பாக பணியாற்றினார். ஏறத்தாழ சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நாமக்கல் நகர்மன்றத் துணைத் தலைவர் செ.பூபதி, நகர திமுக செயலாளா் ராணா ஆனந்த், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் த.வடிவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News