லத்தூா் ஒன்றியக் குழு தலைவா், துணைத் தலைவா் பதவி நீக்கம்

செய்யூர் அருகே லத்தூா் ஒன்றியக் குழு தலைவா் மற்றும் துணைத் தலைவரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசின் முதன்மைச் செயலா் உத்தரவிட்டார்.

Update: 2024-02-04 03:49 GMT
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம் லத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளனா். இவா்களில் 10 திமுக உறுப்பினா்களும், 5 அதிமுக உறுப்பினா்களும் உள்ளனா். ஒன்றியக் குழு தலைவராக சுப்புலட்சுமி பாபு (திமுக), துணைத் தலைவராக கிருஷ்ணவேணி தணிகாசலம் (திமுக) ஆகியோா் தலைமையில் ஒன்றியக் குழு செயல்பட்டு வந்தது. திமுக உறுப்பினா்களிடையே ஏற்பட்ட குழு பூசலால், தலைவா் சுப்புலட்சுமி பாபு, துணைத் தலைவா் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகிய இருவா் மீதும் கடந்த 13.10.2023 அன்று நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுகவை சோ்ந்த 12 உறுப்பினா்கள் நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு ஒருமனதாக நிறைவேற்றியிருந்தனா்.இந்த நிலையில், அரசின் முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், ஒன்றியக் குழு தலைவா் சுப்புலட்சுமி பாபு, துணைத் தலைவா் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகிய இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
Tags:    

Similar News