மூதாட்டிக்கு பாலியல் தொல்லை - சலவை தொழிலாளி கைது
காரைக்குடியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;
Update: 2024-05-20 11:33 GMT
காரைக்குடியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்த சலவை தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இடையர் தெரு நல்லையன் ஆசாரி பள்ளி பின்புறம் வசிக்கும் வயதான மூதாட்டியை(85 வயது) அதே தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளியான செல்வராஜ் (57வயது) மது போதையில் மூதாட்டியின் சேலையைப் பிடித்து இழுத்து மான பங்கம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்து உன்னை கெடுத்துக் கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமன் அராஸ்மென்ட் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியில் வயதான மூதாட்டி ஒருவரை இது போல் மானபங்கம் படுத்தியதாக வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது