ஆழியார் அணையில் மூழ்கி சட்ட கல்லூரி மாணவர் உயிரிழப்பு

 பொள்ளாச்சி அருகே ஆழியார் அணையில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளிக்கச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Update: 2024-04-25 06:11 GMT

அபிநந்த் 

 பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை அருகே  பள்ளிவளங்கால் அணைக்கட்டு பகுதி உள்ளது இந்தப் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லவும் குளிக்கவும் தடை செய்யப்பட்ட பகுதியாகும்.  இங்கு  காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருந்தாலும் சுற்றுலா பயணிகள் சிலர் அதனை கண்டு கொள்ளாது அவ்வப்போது இப்பகுதியில் குளித்து மகிழ்கின்றனர். மேலும் இந்த பகுதியில் தற்போது வரை 150 க்கு மேற்பட்ட  உயிரிழப்புகள் நடந்துள்ளது.

இந்நிலையில் கோவை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவரான அபிநந்த் வெயிலின் தாக்கம் காரணமாக தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக ஆழியார் அணையை அடுத்த பள்ளி வளங்காள் அணைக்கட்டுக்கு சென்றுள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று  தண்ணீரில் மூழ்கி பலியானதாக தெரிகிறது.  இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அபிநந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மேலும் இது குறித்து ஆழியார் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த அணைப்பகுதியில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  தடுப்பு  வேலி  அமைக்க வேண்டும் காவல்துறையினரும் பொதுப்பணி தறையினரும்  தொடர்ந்து இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News