ராணிப்பேட்டை நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்..
ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
Update: 2024-02-19 11:26 GMT
ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்நடத்தினர். மேலும்காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல்துறையால் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி கொடூரமாக தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்க தயங்குவதை கண்டித்தும், இந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பாக மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேந்திரன் தலைமையில் செயலாளர் சரவணன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டையை தொடர்ந்து அரக்கோணம், ஆற்காடு, சோளிங்கர், வாலாஜா நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.