நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு ,செயலாளர் கணேசன், துணைத் தலைவர் அருண் பிரசாத், இணைச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட மூத்த, இளம் வக்கீல்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-07-09 08:07 GMT
நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் முன்பு உள்ள தபால் அலுவலகம் முன்பு வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய முப்பெரும் சட்டத் திருத்தம் மற்றும் பெயரை மாற்றுவதைக் கண்டித்து, மேலும் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர் அப்போது சட்டம் திருத்தம் செய்வதை கண்டித்தும் புதிய சட்டங்களை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினர். குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் அய்யாவு ,செயலாளர் கணேசன்,துணைத் தலைவர் அருண் பிரசாத், இணைச் செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட மூத்த, இளம் வக்கீல்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News