திருப்பத்தூர் பணிமனையின் முன்பு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்குதல் நிகழ்ச்சி!
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் துண்டு பிரசுரம்
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 09:19 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பணிமனை முன்பு தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்குதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது- போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து பணிமனையின் முன்பு தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த அறிவிப்பு குறித்த துண்டு பிரசுரம் வழங்குதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளனம் வேலூர் மண்டல பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலகங்களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாச தொகையை அரசு வழங்க கோருதல் ஓய்வூதியத்திற்கு ஒப்பந்த பலன் அகவிலைப்படி உயர்வு வழங்குதல் கோருதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்து எட்டு ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை அதை உடனடியாக வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் 2000 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணத்தை மீட்கப்பட வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களின் பணம் ரூபாய் 12000 கோடியை கழகமே எடுத்து செலவு செய்து விட்டது வருங்கால வைப்பு நிதி கூட்டுறவு சொசைட்டி கடன் கூட கிடைப்பதில்லை! ஓய்வு பெற்றவுடன் பணப்பலன் வழங்கப்படுவதில்லை. 1.04.2003 ஆம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தவருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். பனியன் போது தொழிலாளி மரணமடைந்தால் தலைவனை இழந்த குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பல் அவருடைய வாரிசுக்கு பணி வழங்கப்பட வேண்டும். 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது அதை உடனடியாக நிரப்ப வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிறது ஊதிய பேச்சு வார்த்தையில் உடனடியாக துவங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் மேலும் ஒரு டிசம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு அறிவிக்கப்பட உள்ளது. உடனடியாக போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என கோரிக்கையை வைத்து இந்த துண்டு பிரசுரம் வழங்க நிகழ்வு நடைபெற்றது! பேட்டி. தண்டபாணி தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் இணை அமைப்பு செயலாளர்!