ராயக்கோட்டையில் மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைவு
ராயக்கோட்டையில் மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-15 16:32 GMT
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ராஜ் ஏற்பாட்டில் ராயக்கோட்டையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சியிலிருந்து விலகி மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்,MLA திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
உடன் மாவட்ட துணை செயலாளர் பி.முருகன்,Ex.MLA, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுமன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கணேசன், மாவட்ட அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி, கிளை செயலாளர்கள், கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.