தேசிய மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் சட்ட விழிப்புணர்வு

சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் தேசிய மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Update: 2024-01-18 05:21 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் தேசிய மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை சார்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் வரவேற்புரை தாஸ் மற்றும் மகளிர் அமைப்பாளர் கவிதா வரவேற்பு ஆற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார் கலந்து கொண்டு சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே பேசினார்.

குறிப்பாக பெண்களுக்கு சொத்தில் பங்கு பெற்றுத் தருதல், வரதட்சணை கொடுமை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஜீவா நம்ச வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள், குழந்தைத் தொழிலாளர் சட்டம் குறித்தும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் லோக் அதாலத் போன்ற சட்டங்கள் மூலமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார், இந்த நிகழ்வில் மகளிர் அணி அமைப்பாளர்கள் அமுதா வாசுகி மற்றும் தேசிய மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை குழுவினர் ஒன்றிணைந்து சிறப்பாக பணியாற்றி வரும் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் சந்திரகுமார் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பொன்னாடை போர்த்தி பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்

Tags:    

Similar News