சட்ட விழிப்புணர்வு முகாம்
அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு, பாலியல் வேறுபாடு களைதல் மற்றும் உட்புகார் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு கலைக்கல்லூரியில் நடைப்பெற்றது.
Update: 2024-01-31 16:30 GMT
அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு, பாலியல் வேறுபாடு களைதல் மற்றும் உட்புகார் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைப்பெற்றது.
இதில் குடும்பநல நீதிமன்ற நீதிபதி செல்வம் கலந்து கொண்டார். இதில் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் சீண்டல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் எவ்வாறு புகார் அளிப்பது என்பது குறித்தும், சட்டத்தின் படி எவ்வாறு தண்டனை பெற்று தருவது என்பது குறித்தும் விளக்கமளிக்கபட்டது. மேலும் சட்ட உதவிகள் தேவைபடுவோர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழுவை அணுகலாம் என தெரிவிக்கபட்டது. இதில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் தோமினிக் அமல்ராஜ், வழக்கறிஞர்கள் செல்வராஜ், அல்லி, பகுத்தறிவாளன், கோமதி மற்றும் 200 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.