சட்டமன்றப் பேரவை நூலகக்குழு ஆய்வுக்கூட்டம்
தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் சட்டமன்றப் பேரவை நூலகக்குழுவினர் அரசு பணி தேர்வுகளுக்காக படித்து வரும் மாணவர்களிடம் கலந்துறையாடலில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-06 10:52 GMT
ஆய்வுக்கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நூலகங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக நூலகக் குழுவினர் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நூலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் தர்மபுரி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் நேற்று மாலை ஆய்வு செய்தனர். அப்போது அரசு பணியில் சேர்வதற்காக தினமும் படிக்க வரும் மாணவர்களிடம் கலந்துறையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நூலகக் குழு தலைவர் மற்றும் குழு சட்டமன்ற உறுப்பின்கள், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்டேஸ்வரன் மற்றும் அரசு துறை அலுவளர்கள் கலந்துக் கொண்டனர்.