விஜய்யின் லியோ திரைப்படம் - எடப்பாடியில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

எடப்பாடியில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் கொண்டாடினர்.

Update: 2023-10-19 16:11 GMT

ரசிகர்கள் கொண்டாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் நடிகர் விஜய், திரிஷா, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த லியோ திரைப்படம் தமிழகம்  முழுவதும் வெளியாகி உள்ளது.இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள குமரன் திரையரங்கில் லியோ திரைப்படம் காலை 9 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் ஒவ்வொரு காட்சிகளுக்கும் ஆரவாரம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News