கபிஸ்தலம் அருகே சிறுத்தை நடமாட்டம் ?.
கபிஸ்தலம் அருகே உடப்பான்கரையில் சிறுத்தை சென்றதாக சொல்லப்பட்ட நிலையில் அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.;
Update: 2024-04-15 02:19 GMT
அதிகாரிகள் ஆய்வு
கபிஸ்தலம் காவல் சரகம் உடப்பான்கரை கிராமம் மதியலகன் மகன் அய்யப்பன் என்பவர் 13.4.24ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் தனது பருத்தி வயலில் தண்ணீர் பாய்ச்சும் போது சத்தம் கேட்டு பார்த்த போது சிறுத்தை போனதாக தெரிவித்ததன் பேரில் வயலில் அண்டகுடி கிராம நிர்வாக அலுவலர் உடன் சென்று பார்க்கப்பட்டது. சிறுத்தை போனதாக சொன்ன இடத்தில் கால் தடம் எதுவும் இல்லை.