ஓமலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்

ஓமலூர் அருகே காருவள்ளி கரட்டில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.;

Update: 2024-06-02 13:02 GMT
ஓமலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்
  • whatsapp icon
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காருவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பக்காடு பகுதியில் செம்பான் மகன் சீனிவாசன் இவருடைய கருவுற்று இருந்த ஒரு பசுமாடு உடலில் பல்வேறு இடங்களில் சிறுத்தை கடித்து நிலையில் உடல் சிதைந்து இறந்து கிடந்துள்ளது. சம்பவம் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாட்டின் உடம்பில் கடிக்கப்பட்ட காயங்களின் ஆழம், சிறுத்தை நடந்து சென்ற கால் தடம், மாட்டை அடித்து தின்று விட்டு புரண்ட தடையங்கம் மற்றும் சிறுத்தை சானம் உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். இதனிடையே பொதுமக்கள் அனைவரும் இரவு நேரங்களில் தனியாக வெளியே வரவேண்டாம், குழந்தைகளை வெளியே விட வேண்டாம் என பொதுமக்களிடையே வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News