வால்பாறை அருகே சிறுத்தை நடமாட்டம்-சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்.

வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2023-12-10 05:01 GMT

வால்பாறை அருகே சிறுத்தை நடமாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.காட்டு யானை, சிறுத்தை,கரடி,காட்டு மாடு, போன்றவை குடியிருப்பு பகுதிக்குள் நடமாடுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஐயர் பாடி எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு அருகே நடந்து செல்வதை ஒருவர் தனது செல்போனில் நடந்து சென்று வீடியோ எடுத்துள்ளார்.சிறுத்தை நடந்து மெல்ல செல்கிறது அதை பின் தொடர்ந்து வீடியோ எடுத்து ஒருவர் செல்கிறார்.சிறுத்தை திரும்பிப் பார்த்து மனித நடமாட்டம் உள்ளதை கண்டு ஓடுகிறது.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வனவிலங்குகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News