எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் பாடம் கற்பிப்போம் !

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் பாடம் கற்பிப்போம் என அதிமுக.,வில் இணைந்த காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.;

Update: 2024-01-20 04:21 GMT

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் பாடம் கற்பிப்போம் என அதிமுக.,வில் இணைந்த காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

 நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். 

 இந்நிலையில் அதிமுகவில் இணைந்த பின்னர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாகஉள்ளது.

Advertisement

அதிமுக. 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழி நடத்தி, ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும், எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம்" இவ்வாறுகூறியுள்ளார்.

Tags:    

Similar News