தமிழகத்தில் மாற்றத்தை நோக்கி பயணிப்போம்! அனல் பறக்கும் பிரச்சாரம்

மத்திய சென்னை- கோபாலபுரத்தில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் தேர்தல் பிரச்சாரம்

Update: 2024-04-01 07:42 GMT

பிரச்சாரம்

மார்ச் 30- ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 9மணி வரை மத்திய சென்னை கோபாலபுரத்தில் வார்டு எண் 111-வது பகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.பொது மக்கள், மற்றும் பாஜக தொண்டர்களின் வரவேற்போடு கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் இருந்து மாலைப் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிரச்சார தொடக்கத்தில் பேசிய வினோஜ் பி.செல்வம் இங்கிருந்து வரலாற்றை மாற்றி எழுதுவோம், தமிழகத்தில் மாற்றத்திற்கான நேரம் இது என பிரச்சாரத்தை தொடங்கினார்.பின் மாற்றுக்கருத்து உடையோரும் இம்முறை பிரதமர் மோடியின் தலைமையை ஏற்பதே சாலச்சிறந்தது எனமக்கள் உணர்ந்திருப்பதில் பெருமகிழ்ச்சி என்றார்.மக்களை களத்திற்கு சென்று சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Tags:    

Similar News