கொலை வழக்கில் ஆயுள் தண்டனை: தலைமறைவானவர்கள் கைது

கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்து தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2023-10-24 14:57 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாகர்கோவில் அருகே தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரை கடந்த 2011-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது சகோதரர் பாபு, அய்யப்பன் ஆகியோர் கொலை செய்தனர். இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.வழக்கு விசாரித்து நீதிபதி கடந்த 2019-ம் ஆண்டு மணிகண்டன், பாபு, அய்யப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Advertisement

இதையடுத்து 3 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர்.       இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் இவர்கள் மேல் முறையீடு செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுதலையானார்கள். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு கீழ் கோர்ட் இவர்களுக்கு விதித்த தண்டனையை ஐகோர்டு உறுதி செய்தது. மணிகண்டன், பாபு, அய்யப்பன் 3 பேரும் 2 வார காலத்திற்குள் சரணடைய வேண்டும் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் அய்யப்பன் மட்டும் சரண் அடைந்தார். மணிகண்டன், பாபு இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.

போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி பாபுவை போலீசார் கைது செய்தனர்.      தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். ஒரு ஆண்டுகளுக்கு பிறகு தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News