முதலுதவிக்கான விழிப்புணர்வு வீடியோ: மயக்கவியல் மருத்துவர்கள் வெளியீடு

உயிர் காக்கும் முதலுதவிக்கான விழிப்புணர்வு வீடியோவை மயக்கவியல் மருத்துவர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

Update: 2024-04-08 12:14 GMT

விழிப்புணர்வு வீடியோ வெளியீடு 

ஈரோடு மயக்கவியல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு வீடியோ வெளியிடும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பி.சரவணகுமார் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு மயக்கவியல் மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் செல்வகுமார், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் கிரிதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் அருண்பாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் முன்னாள் இணை இயக்குனர் டாக்டர் கனகாச்சலகுமார் கலந்துகொண்டு முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டார்.

இதில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை எப்படி அளிப்பது? என்பதை விளக்கும் காட்சிகள் செயல் விளக்கத்துடன் அந்த வீடியோ இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், “ஒருவர் திடீரென மயங்கி விழுந்தால் உடனடியாக முதலுதவி கொடுப்பதன் மூலமாக அவரது உயிரை காப்பாற்றி விடலாம். அதற்கு நாடி, சுவாசம், நினைவாற்றல் ஆகியன உள்ளதா? என்பதை பரிசோதித்த பிறகு அதற்கேற்ப முதலுதவி அளிக்கப்படும். இதற்கான பயிற்சி எங்களது சங்கம் சார்பில் அளிக்கப்படுகிறது”, என்றனர். இ

ந்த நிகழ்ச்சியில் ஈரோடு மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் முருகன், சங்க மாநில தலைவர்கள் முத்துகிருஷ்ணன், செல்வகுமார், டாக்டர் நித்தியானந்தம் , ஈரோடு செயலாளர் அருண்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News