மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை

Update: 2023-12-21 02:10 GMT

சாரல் மழை 

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக லேசான மழை விடிய விடிய பெய்து வருகிறது. கடற்கரை ஓர கிராமங்களில் மிக லேசான மழையும் உள் மாவட்டத்தில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி வரை பெய்த மழையளவு. மயிலாடுதுறை 29 மி. மீ., மணல்மேடு 3 மி. மீ., சீர்காழி 10 மி. மீ., தரங்கம்பாடி 23 மி. மீ., செம்பனார் கோயில் 12.8 மி. மீ., மழை பெய்துள்ளது .தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையை. விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
Tags:    

Similar News