மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய லைன் மேன் கைது

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்

Update: 2024-07-03 08:54 GMT

கைது

விழுப்புரம் மாவட்டம் காணை அடுத்த நாதன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் பலராமன்(50) இவர் கடந்த ஒரு வருடமாக கண்டாச்சிபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் லைன் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கண்டாச்சிபுரம் அடுத்த கீழ்வாலை கிராமத்தில் உள்ள முருகதாஸ் என்பவருக்கு சொந்தமான மரபட்டரைக்கு மின் இணைப்பு பெற போதிய பணம் கட்டியபோதும் மின் இணைப்பு கொடுக்க முருகதாஸிடம் அப்பகுதி லைன் மேன் பலராமன் ரூ.3500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பணம் முருகதாஸால் கொடுக்க முடியாததால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து மரப்பட்டரை உரிமையாளர் முருகதாஸ் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சத்தியராஜிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலிசார் கீழ்வாலை மரப்பட்டரையில் மறைந்திருந்து லைன் மேன் பலராமன் ரசாயனம் தடவிய ரூ.2000 பணத்தை லஞ்சமாக வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, கண்டாச்சிபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News