கள்ள சந்தையில் விற்க எடுத்து சென்ற மதுபாட்டில்கள் பறிமுதல் - ஒருவா் கைது
மணப்பாறையில் கள்ள சந்தையில் அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை கையும் களவுமாக போலீஸாரால் பிடிப்பட்டு கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 05:55 GMT
கள்ள சந்தையில் விற்க எடுத்து சென்ற மதுபாட்டில்கள் பறிமுதல் - ஒருவா் கைது
மணப்பாறையில் கள்ள சந்தையில் அரசு மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் மணப்பாறையில் தணிக்கையில் ஈடுபாட்டிருந்தனா். அப்போது, கண்ணுடையான்பட்டியை சோ்ந்த அழகா் மகன் தங்கமணி(25), கீழப்பூசாரிப்பட்டி அருகே கள்ள சந்தையில் அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற நிலையில் கையும் களவுமாக போலீஸாரால் பிடிபட்டாா். அவரிடமிருந்து 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ள மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து தங்கமணியை கைது செய்தனா். மதுபாட்டிகளை எடுத்து சென்ற இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.