திருப்பூரில் புத்தாண்டு தினத்தன்று மது விற்பனை அமோகம்

திருப்பூரில் புத்தாண்டு தினத்தன்று ரூ. 18.7 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

Update: 2024-01-03 11:36 GMT

திருப்பூரில் புத்தாண்டு தினத்தன்று ரூ. 18.7 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

திருப்பூரில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் மது விற்பனை அமோகம். திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 225 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக்கின் மொத்த மது வகைகள் விற்பனை 18 கோடியே 7 லட்சம் ஆகும். இது கடந்த ஆண்டை விட குறைவான விற்பனை என கணக்கிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் இந்த ஆண்டு புத்தாண்டு முன்தினம் மற்றும் அடுத்த நாளில் மது விற்பனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News