காரிமங்கலத்தில் கால்நடைகள் விற்பனை அமோகம்
காரிமங்கலம் வாரச்சந்தையில் ஆடுகள், மாடுகள் மற்றும் நாட்டுக்கோழிகள் ரூ.92 லட்சத்துக்கு விற்பனையானது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக பிரத்தியேகமாக வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கூடிய வாரச் சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது கால்நடைகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆடுகள் 4000 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாயில் வரையில் என சுமார் 55 லட்சத்திற்கு விற்பனையானது. மாடுகள் தரம் மற்றும் ரகத்திற்கு தகுந்தவாறு 36 லட்சத்திற்கு விற்பனையானது நாட்டுக்கோழிகள் ஒரு லட்சத்திற்கு விற்பனையான நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 92 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது.