காங்கேயத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் லோடு ஆட்டோ மோதி விபத்து

காங்கேயத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதி விவசாயி பலியானர்,மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்

Update: 2024-05-18 01:54 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் பின்னால் அதிவேகமாக சென்று லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் இருந்த இருவர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் காயத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிக்குட்பட்ட சென்னிமலை சாலையில் வாய்க்கால் மேடு அருகே சாலையோரம் சங்ககிரி பகுதியை சேர்ந்த லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் காங்கயத்தில் இருந்து லோடு ஆட்டோவில் தொங்குட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதிஸ்குமார் வயது 43, நிழலி பகுதியை சேர்ந்த பாலு வயது 29 மற்றும் கொடுவாய் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் வயது 40 ஆகியோர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். சென்னிமலை சாலை வாய்க்கால் மேடு அருகே வந்த போது அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் அதிவேகமாக மோதியது. இதில் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்திருந்த விஸ்வநாதன் என்பவர் மார்பில் லாரியின் இரும்பு கம்பி துளைத்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் ஆட்டோவை ஓட்டி வந்த சதிஸ்குமார் மற்றும் பாலு ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் அருகில் இருந்தவர்கள் லாரியில் சிக்கிருந்த ஆட்டோவை வெளியே எடுத்து உடனடியாக விபத்துக்குள்ளான மூன்று பேரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு தலைமை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாலு என்பவரை திருப்பூர் தனியார் மருத்துவமனைக்கும், சதிஸ்குமாரை கோவை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News